Tuesday, April 26, 2016

Nurse ( something special and great)

வருங்கால  செவிலியனே  !
   "இந்த பதிவு யாருடைய வாழ்வையும் நாசப்படுத்த அல்ல "
         விளக்கினை ஒளி (lamp lighting ) ஏற்றி தான்  என் பயணம் செவிலியனாய் ஆரம்பித்தது அப்போது உணரவில்லை என் வாழ்வு இருளாவதை. என்ன வளம் இல்லை  இந்த திருநாட்டில்  என்று கூறியுள்ளது செவிலியர்களுக்கு பொருந்தது போல   எங்களுக்கு  மட்டும்  வளங்கள்  மறுக்கப்படுகின்றன. மதிப்பும், மரியாதையும்  செவிலியன் (male nurse), செவிலி (female  nurse)  என்னும்  போது குறைந்து  போகிறதே ஏன்?
பல மேதைகள்  கண்ட இந்த தமிழக மக்களுக்கு இன்னும்  செவிலியரில் ஆண்களும் உண்டு என்பது தெரியாமல் இருப்பது  புரியாத புதிராக உள்ளது.
நர்ஸ் என்றாலே தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் விஷ நரிகள்  இங்கு அதிகம்.  நர்ஸ்கள் அனைவருக்கும் இறைவனின் இருப்பிடத்தில் இடம் உண்டு  ஆனால்  இங்கு பல ஜென்மங்கள் வேலைக்காரி  யை போல நடத்துவதும், தவறாய் பணியை சித்தரிப்பதும் வாடிக்கையாகி விட்டது. நாங்கள்  மேலை நாட்டு  வேலைக்கு  செல்ல ஆசைப்படுவதற்கு பணம் ஈட்டுவது மட்டுமே  நோக்கமல்ல எங்கள்  பணிக்கு மதிப்பும், மரியாதையும் கடுகளவாவது  கிடைக்கின்றதும் காரணம்.
  பணி செய்யும் காலங்களில்  நர்ஸ் பணிக்கு வந்ததற்காக வேதனைபடாத செவிலியர்  இல்லை என நிச்சயமாக கூறலாம்.
  செவிலியர் கல்லூரிகளின்  விளம்பரத்தையும்,  பொய் வார்த்தைகளையும் நம்பி  தனது வாழ்க்கையை அடகு வைக்காமல் வேலைவாய்ப்பு  குறைவாய் இருந்தாலும் வேறு ஏதாவது  பட்டப்படிப்பு  படித்து சமுதாயத்தில்  சுய மரியாதையுடன் வாழ்வது சிறப்பு.
விரைவில்  செவிலியர் (Nursing) படிப்பும் வேலைவாய்ப்பும் வசதிமிக்க நபர்கள் மட்டுமே சேரக்கூடியதாக மாறி வருகிறது.
இன்று பல லட்சங்கள் இல்லாமல் இந்த படிப்பை தொட கூட முடியாது. அப்படியே முடித்து பட்டம் பெற்றாலும் சிறு தொகை செலுத்தி பதிவு செய்த பின்னரே வேலைக்கு சேர முடியும் அப்படியே வேலைக்கு சேர்ந்தாலும் சம்பளம் எதிர்பார்த்த அளவை விட சொல்லப்போனால் மமருத்துமனையின் துப்புரவு பணியாளர் வாங்குவதை விட சில ரூபாய்கள் கூடுதலாக இருக்கும்  கடைசியில்  துப்புரவு பணியாளர் over time செய்து  நம்மை தோற்கடித்து விடுவார். சரி வேறு மருத்துவமனையில்   வேலை வாய்ப்பு  தேடினால்  அனுபவமில்லை என காரணம் காட்டி சம்பள பேரம் நடக்கும்  அது முதலுக்கே மோசம் முடிவில் வாழ்க்கை வெறுப்பது நிஜம்.
படிக்கவும் பணம் , வெளிநாட்டில்  பணி புரிய நினைத்தால் ஒவ்வொரு நாடும் தனக்கென தேர்ந்தெடுக்க வேவ்வேறு தேர்வுகளை எழுத வேண்டியது கட்டாயமாகிறது உதாரணமாக  IELTS, PRO METRIC, DHA,HAAD etc... இதற்கான  வகுப்பிற்கும், தேர்விற்கும் சில பல ஆயிரங்கள் செலவு  செய்தாக வேண்டும். ஒருவேளையாக தேறினால் வெளிநாட்டு முகவருக்கு (Foreign Agent) பல இலட்சங்களை இறைக்க வேண்டும் இவ்வளவு செய்து முடித்து அங்கு சென்று திரும்பி தாய் நாடு வந்தாலும் இங்கு சொந்தகாரன் கேட்பான் என்ன தம்பி வெளிநாட்டு ஆஸ்பத்திரில துடைக்கிற வேல செய்யறியானு.!

Wednesday, March 23, 2016

Thursday, February 11, 2016

ஒரு தாயின் புலம்பல் கவிதை,,,,,,,,,,,


எனதருமை மகனே !
எனதருமை மகனே !
நான்
உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
முதுமையின் வாசலில் - நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்...
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !
என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான்
சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே.....
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு
கூர்க !
ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே.....
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
இதயம் கொள்க !
ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே....
ஒரே
மாயாவி கதையை
ஒரு நூறு முறை
எனை படிக்கச் சொல்லி
நீ
உறங்கிய
இரவுகளை ஞாபகம்
கொள்க !
நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே....
உன்னை
குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை
எனக்காக புதுப்பித்துத் தருக!
புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் - உன்
புயல் வேகப் புரிந்துகொளல்
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை !
கேவலப் படுத்தாதே....
கற்றுத் தருக ! கவனித்துப்
பழக அவகாசம் தருக !
இனி,
சில நேரங்களில் -
என்
நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்!
நிறைய வேலை இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே.....
என் அருகிருந்து
ஆற்றாமை தேற்றுக!
ஆசுவாசப் படுத்துக!
என் கால்கள்
என்னை ஏமாற்றுகையில்
நீ
முதல் நடை பழக
என் விரல்
நீண்டது போல்
கைகொடுத்து
எனக்கு உதவி செய்க !
ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது
போதுமென்று !
வருத்தப் படாதே.....
சில
வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை...
சில
வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை...
காலம்
வரும்போது - இதை
நீயும்
புரிந்து கொள்வாய் !
இனி நான் வேண்டுவதெல்லாம்
நீ எனை
புரிந்து கொண்ட
புன்னகை !
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.....
என் வாழ்வு
அமைதியோடும் - உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..????
( ஓர் தாய் முதுமையில்
மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை...)
இது ஏதோ ஒருவர் அனுப்பியது அல்ல நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நடக்கப்போவது..!!
நமது தாய், தந்தையை பேணி காப்பது நமது தலையாய கடமை,
நமது உயிர் இருக்கும் வரை நாம் அவர்களை பேனிக்காப்போம்.
நமக்கும் ஒரு நாள் இந்த முதுமை வரும் அதற்குள் நமது பணியை சிறப்பாக செய்து நமது பெற்றோரையும் சிறப்பாக வாழ வைப்போம்.

Wednesday, January 27, 2016

வெளிநாடு வந்து சமைத்து நானே சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டில் தண்ட சோறாக இருப்பதே மேல்

Monday, January 25, 2016

விடா முயற்சி

விதைத்துக் கொண்டே இரு முழைத்தால் மரம் இல்லையேல் உரம் .......

நாளைய விடியல்

விதைத்தவன் உறங்கினாலும் 
விதைகள் 
உறங்குவது இல்லை. 

Sunday, January 24, 2016


cute love

Eyes speak a lot in love but when love is
far away, even a "hmm" in your voice
tells the state. You can actually hear text
of that person in their voice as u read it!
If u did yea u love them more than u
think u do! Value it heart emoticon
i'll always love u alot  

love


I'm not alone..
i'm with you
I don't stay alone
stay with your beautiful memories
I don't miss you..
Because i never forget you
I don't let anyone touch me
Because i am in touch with you
I don't look for another soul mate
Because my soul has met with you forever 

குழந்தை மனம்


அனைவரும்
படிக்கவேண்டிய
மிகப்பெரிய காவியம்.

தாய் பாசம்


இரும்பு சிறையில் 
இருந்துகூட தப்பி விடலாம் - ஆனால்
அவள் விழி சிறையில் இருந்து தப்ப இயலாது

தற்கொலை


வீரமான கோழைத்தனம்
புரியவில்லையா?
கோழையால் மட்டுமே
சாத்தியப்படும் வீரசெயல்....

காதலுக்கு நாலு கண்கள்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
கல்லால் இதயம் வைத்து
கடும் விஷத்தால் கண்ணமைத்து
கணக்கில்லாப் பொய்களுக்குக்
காரணமாய் நாக்கமைத்துக்
கள்ள உருவமைத்துக்
கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரை - உலகம்
நடமாட விட்டதடா!

காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை!

நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை
பரமனையும் மதிப்பதில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பேதைப்பெண்கள் இதைப்
பெரும்பாலும் உணர்வதில்லை
பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பெற்றவளைப் பேயென்பார்
மற்றவளைத் தாயென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
கண்மூடி மாந்தர் இதை
கடைசிவரை அறிவதில்லை!

பொழுது

செவ்வானம் மூடிய அஸ்தமனத்தின் பின்
இரவின் இருளின் முற்றுப் புள்ளியோடு
முடிவடைந்ததாய் சொல்லப் பட்ட
நாளொன்றின் பின்னலும்
தினமொரு புதிய பொழுது
நீள்கிறது
தீர்ந்து போன பத்தியின்
சாம்பலின் நசிவிலும்
வீடெங்கும்
விரட்டி விட முடியாது
நிறைந்து கிடக்கும் வாசமாய்
நீயும் நானும் பேசி முடித்து விட்ட
வாக்கியங்களின் நீள்
அமைதியின்
பின்னும்
இன்னும்
சொல்லி விட முடியாத
தேவையுமில்லாத
உணர்வுகள் நீளப் போகின்றன
சுவாசமுடன்.................

மொழி

தொடாமல் பேசுவது 
காதலுக்கு நல்லது. 
தொட்டுப் பேசுவதுதான் 
நட்புக்கு நல்லது. 
தொடுதலின் வழியே 
கசியும் அர்த்தங்களை 
எந்த மொழி 
பேசிவிடும்

உழைப்பு

நல்ல நண்பன் இல்லாதவன் பெரும் அதிர்ஷ்டம் இல்லாவதன்
உழைப்பு எந்த மனிதனையும் அவமானப்படுத்தாது
எதையும் ஊடுருவிப்பார் எதிலும் ஒரு சிறப்பான நல்ல குணம் இருக்கும்
நல்ல முறையில் வாழ்பவரே போதிய அளவு கற்றவராவர்
அமைதியாக இரு, நீ எவரையும் வசபடித்திகொள்ள முடியும்
உறுதியைப் போல் உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்
நீங்கள் கேள்விப்பட்டதால் மட்டும் எதையும் நம்பி விடாதீர்கள்

உழைப்பு

துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

சூழ்நிலை

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.
 நம்பிக்கை