வருங்கால செவிலியனே !
"இந்த பதிவு யாருடைய வாழ்வையும் நாசப்படுத்த அல்ல "
விளக்கினை ஒளி (lamp lighting ) ஏற்றி தான் என் பயணம் செவிலியனாய் ஆரம்பித்தது அப்போது உணரவில்லை என் வாழ்வு இருளாவதை. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று கூறியுள்ளது செவிலியர்களுக்கு பொருந்தது போல எங்களுக்கு மட்டும் வளங்கள் மறுக்கப்படுகின்றன. மதிப்பும், மரியாதையும் செவிலியன் (male nurse), செவிலி (female nurse) என்னும் போது குறைந்து போகிறதே ஏன்?
பல மேதைகள் கண்ட இந்த தமிழக மக்களுக்கு இன்னும் செவிலியரில் ஆண்களும் உண்டு என்பது தெரியாமல் இருப்பது புரியாத புதிராக உள்ளது.
நர்ஸ் என்றாலே தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் விஷ நரிகள் இங்கு அதிகம். நர்ஸ்கள் அனைவருக்கும் இறைவனின் இருப்பிடத்தில் இடம் உண்டு ஆனால் இங்கு பல ஜென்மங்கள் வேலைக்காரி யை போல நடத்துவதும், தவறாய் பணியை சித்தரிப்பதும் வாடிக்கையாகி விட்டது. நாங்கள் மேலை நாட்டு வேலைக்கு செல்ல ஆசைப்படுவதற்கு பணம் ஈட்டுவது மட்டுமே நோக்கமல்ல எங்கள் பணிக்கு மதிப்பும், மரியாதையும் கடுகளவாவது கிடைக்கின்றதும் காரணம்.
பணி செய்யும் காலங்களில் நர்ஸ் பணிக்கு வந்ததற்காக வேதனைபடாத செவிலியர் இல்லை என நிச்சயமாக கூறலாம்.
செவிலியர் கல்லூரிகளின் விளம்பரத்தையும், பொய் வார்த்தைகளையும் நம்பி தனது வாழ்க்கையை அடகு வைக்காமல் வேலைவாய்ப்பு குறைவாய் இருந்தாலும் வேறு ஏதாவது பட்டப்படிப்பு படித்து சமுதாயத்தில் சுய மரியாதையுடன் வாழ்வது சிறப்பு.
விரைவில் செவிலியர் (Nursing) படிப்பும் வேலைவாய்ப்பும் வசதிமிக்க நபர்கள் மட்டுமே சேரக்கூடியதாக மாறி வருகிறது.
இன்று பல லட்சங்கள் இல்லாமல் இந்த படிப்பை தொட கூட முடியாது. அப்படியே முடித்து பட்டம் பெற்றாலும் சிறு தொகை செலுத்தி பதிவு செய்த பின்னரே வேலைக்கு சேர முடியும் அப்படியே வேலைக்கு சேர்ந்தாலும் சம்பளம் எதிர்பார்த்த அளவை விட சொல்லப்போனால் மமருத்துமனையின் துப்புரவு பணியாளர் வாங்குவதை விட சில ரூபாய்கள் கூடுதலாக இருக்கும் கடைசியில் துப்புரவு பணியாளர் over time செய்து நம்மை தோற்கடித்து விடுவார். சரி வேறு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு தேடினால் அனுபவமில்லை என காரணம் காட்டி சம்பள பேரம் நடக்கும் அது முதலுக்கே மோசம் முடிவில் வாழ்க்கை வெறுப்பது நிஜம்.
படிக்கவும் பணம் , வெளிநாட்டில் பணி புரிய நினைத்தால் ஒவ்வொரு நாடும் தனக்கென தேர்ந்தெடுக்க வேவ்வேறு தேர்வுகளை எழுத வேண்டியது கட்டாயமாகிறது உதாரணமாக IELTS, PRO METRIC, DHA,HAAD etc... இதற்கான வகுப்பிற்கும், தேர்விற்கும் சில பல ஆயிரங்கள் செலவு செய்தாக வேண்டும். ஒருவேளையாக தேறினால் வெளிநாட்டு முகவருக்கு (Foreign Agent) பல இலட்சங்களை இறைக்க வேண்டும் இவ்வளவு செய்து முடித்து அங்கு சென்று திரும்பி தாய் நாடு வந்தாலும் இங்கு சொந்தகாரன் கேட்பான் என்ன தம்பி வெளிநாட்டு ஆஸ்பத்திரில துடைக்கிற வேல செய்யறியானு.!