Thursday, May 18, 2017

வாழத்தெரியாதவன்

வாழத்தெரிந்த
எனக்கு, ஏனோ நடிக்கத்தெரியவில்லையே

கரன்சி ரூபாய்களுக்கும்
கள்ளநோட்டுகளுக்கும்
விலைபோகத் தெரியாத நான் வாழத்தெரியாதவன் தான்

வஞ்சப்புகழ்ச்சிக்கும்
வஞ்சகர்களின் சூழ்ச்சிக்கும்
வளைந்து கொடுத்துச்
செல்லத்தெரியாத நான்
வாழத்தெரியாதவன் தான்

ஆடம்பர வாழ்க்கையையும்
அர்த்தமில்லா வார்த்தைகளையும்
நேசிக்கத்தெரியாத நான்
வாழத்தெரியாதவன் தான்

கொலைகளும்,களவுகளும்
கற்றுத்தேர்ந்த உலகில்
கண்ணியத்தை கடைபிடிக்கும் நான்
வாழத்தெரியாதவன் தான்

காமத்தை முன்நிறுத்தி
கற்பினை களவாடத்தெரியாத
காதலனான நான்
வாழத்தெரியாதவன் தான்

நம்பவைத்து நாசம் செய்யும்
உறவுகளுக்கு மத்தியில்
நம்பியவர்களுக்காக
நாயாக உழைக்கும் நான்
வாழத்தெரியாதவன் தான்

ஏமாற்றங்களும் ஏளனங்களும்
பரவிக்கிடக்கும் இவ்வுலகில்
பழகியவர்களுக்காக
உயிரையும் கொடுக்கும் நான்
வாழத்தெரியாதவன் தான்

கொஞ்சிப்பேசி கொலைசெய்யும் உறவுகள்
நம்பவைத்து நாசம்
செய்யும் நட்புகள்
கத்தியின்றி காயம்
செய்யும் காதலுமென
எல்லாவற்றையும்
இழந்து போகும்
இந்த வாழ்க்கையில்

இப்படி நடித்துக்கொண்டே
வாழ்வதை விட
வாழத்தெரியாதவனாகவே
வாழ்ந்துவிட்டுப்போகிறேன்
முழுவதும் எனக்காகவே
நானும் , எனக்காக வாழும்
என் சிகரெட்டும்,,,,,

         #Jickson001 

No comments:

Post a Comment